நாடளாவிய ரீதியில் எரிபொருள் பதுக்கல்: அதிரடி சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

#SriLanka
Lakhi
3 months ago
நாடளாவிய ரீதியில் எரிபொருள் பதுக்கல்: அதிரடி சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த நபர்களைக் கைது செய்யும் நோக்கில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனைகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சோதனைகளின் போது சுமார் 753 லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மஹரகம - பமுணுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 22 லீற்றர் பெற்றோலை சட்டவிரோதமாக வைத்திருந்த 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, நிட்டம்புவ பொலிஸாரால் கம்மல்பிட்டிய பகுதியில் உள்ள சில்லறைக் கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிய அனுமதியின்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த 146 லீற்றர் பெற்றோல் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாகப் பசியால பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வூட்- வென்ச்சர் தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 565 லீற்றர் டீசலைத் பதுக்கி வைத்திருந்த 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், மினுவாங்கொட - கீனகஹலந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 லீற்றர் பெற்றோலை மினுவாங்கொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4