இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

#SriLanka #Australia #world_news #education #ImportantNews #Workers #L4
Lakhi
3 months ago
இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

கல்வி மற்றும் கிரிக்கெட் ஆகிய இரு துறைகளிலும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் காணப்படுவதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் கல்வி, விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய துறைகளில் இலங்கைக்குத் தேவையான ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் அவுஸ்திரேலியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை புதிய மட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து இந்த சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4