போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதார தாக்கம்: ஜெய்சங்கர் - விஜித ஹேரத் ஆலோசனை.

#India #SriLanka #War #Economic #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதார தாக்கம்: ஜெய்சங்கர் - விஜித ஹேரத் ஆலோசனை.


மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய போர்ச் சூழல் மற்றும் அதன் பிராந்திய தாக்கங்கள் குறித்தும் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக ஆராய்ந்தனர்.

இதன்போது, இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கு முதலிடம்" என்ற கொள்கையின் கீழ் இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதை ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் இந்தியாவின் "மகாசாகர்" முன்னெடுப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4