சமையல் எரிவாயு விலை உயர்கிறது : லிட்ரோ நிறுவனத்தின் அதிரடித் தகவல்!

#SriLanka #prices #Cooking #Litro Gas #company #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
சமையல் எரிவாயு விலை உயர்கிறது : லிட்ரோ நிறுவனத்தின் அதிரடித் தகவல்!

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன சூரியன் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் வரையில் போதுமான கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல் விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் எரிசக்தி உற்பத்திக்கு நிலவும் கேள்வியின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி புதிய விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4