மின்வெட்டு அபாயம்? எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நாடாளுமன்றத்தில் விளக்கம்!
நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில் மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதம் வரை மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரவு நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெருமளவில் எரிபொருளிலேயே தங்கியுள்ளது. எனவே, இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரையான 'பீக் ஹவர்' (Peak Hours) நேரங்களில் மின்சாரத்தைச் சேமிப்பது அவசியமாகும்.
தேவையற்ற மின்விளக்குகளை அணைப்பதன் மூலமும், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலமும் மின் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேசிய தொகுதி கட்டுப்பாட்டு மையத்தின் பணிப்பாளர் புத்திக சமரகேசர இது குறித்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதம் இறுதி வரை தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை மே மாதம் வரையிலான மின்சாரத் தேவையை ஈடுகட்ட போதிய எரிபொருள் இருப்பதாகவும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்