நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

#SriLanka #weather #water
Soruban
3 months ago
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் நுகர்வு சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தால் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நேரிடும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார எச்சரித்துள்ளார். எனவே பொதுமக்கள் நீரை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் நீரின் தேவை அதிகரித்துள்ள போதிலும், சுத்திகரிப்பு நிலையங்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே நீரை உற்பத்தி செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பத்தலை சுத்திகரிப்பு நிலையம்: நாளொன்றுக்கு 560,000 கனமீற்றர்.லேபுகமை சுத்திகரிப்பு நிலையம்: நாளொன்றுக்கு 150,000 கனமீற்றர்.

தற்போது நாடு முழுவதும் எமது அதிகபட்ச கொள்ளளவிலேயே நீரை விநியோகித்து வருகிறோம். இதற்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் எமக்கு இல்லை. எனவே, நுகர்வு இன்னும் அதிகரித்தால் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படும்" என அவர் தெரிவித்தார்.

நீர் வீணாக்கப்படுவதால் குழாய்களின் இறுதிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், உயர்ந்த இடங்களுக்கும் குறைந்த அழுத்தத்திலேயே நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாவனையை நிறுத்த வேண்டியதில்லை, ஆனால் வீணாவதைத் தவிர்க்க வேண்டும். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், வறட்சி நீடித்தால் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்," என தலைவர் வலியுறுத்தினார்.

ஆறுகளின் முகத்துவாரங்கள் ஊடாக குடிநீரில் உப்பு நீர் கலப்பது தற்போது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு மனிதச் செயல்பாடுகளே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார். உப்பு நீர் கலப்பதைத் தடுக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது களனி ஆற்றை மையப்படுத்தி விசேட உப்பு நீர் தடுப்பு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4