புத்தாண்டு காலத்தில் அரிசி விலை உயருமா? - அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

#SriLanka #rice #prices #government #New Year #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
1 hour ago
புத்தாண்டு காலத்தில் அரிசி விலை உயருமா? - அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அரிசி விலையை அதிகரிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நுகர்வுக்குத் தேவையான அரிசி இருப்பு போதுமானளவு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், சந்தையில் தற்போது அரிசி விநியோகம் சீராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

"எங்களிடம் தாராளமான அளவில் நாடு அரிசி கையிருப்பில் உள்ளது. உண்மையில் சொல்லப்போனால், தேவைக்கு அதிகமான நாடு அரிசி எங்களிடம் உள்ளது.

கீரி சம்பா அரிசி தொடர்பில் ஒரு சிறிய சிக்கல் நிலவினாலும், அதன் விநியோகத்தை மேலாண்மை செய்யத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

தற்போதைய சந்தை விநியோகத்திற்காக கடந்த பருவத்தில் பெறப்பட்ட நெல் மற்றும் இந்த பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.

இதன் மூலம் தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதி செய்ய முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

அரிசி விலையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின், அது போக்குவரத்து மற்றும் எரிபொருள் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அமையுமே தவிர, அரிசி தட்டுப்பாட்டினால் விலை அதிகரிக்காது என்பதை அவர் வலியுறுத்தினார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!