வரிசைகளுக்கு இதுதான் காரணம்! - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கிய பின்னணி.

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
வரிசைகளுக்கு இதுதான் காரணம்! - பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கிய பின்னணி.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தேவைப்பாட்டை விட 10 சதவீதத்திற்கும் அதிகமான மேலதிக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் அவசியமற்ற முறையில் எரிபொருளைச் சேமிப்பதைத் தவிர்த்தால் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. ஆனால், எரிபொருளை அதிகளவில் சேமித்து வைப்பதும், விநியோகத்தில் ஏற்படும் முறையற்ற முகாமைத்துவமுமே தற்போதைய சவால்களுக்குக் காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு கப்பலில் 40,000 மெட்ரிக் டொன் எரிபொருள் வரும்போது, அது தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆனால், பொதுமக்கள் தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்ய முற்படும்போது தட்டுப்பாடு போன்றதொரு தோற்றம் உருவாகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிக்க QR குறியீட்டு முறை பெரிதும் உதவியுள்ளது எனவும், இதன் மூலம் மாதாந்தத் தேவை சரியாகப் பூர்த்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆறு மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை ஒரே நேரத்தில் சில நபர்கள் கோருகின்றனர். இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், சாதாரண நுகர்வோருக்கு எவ்வித இடையூறுமின்றி எரிபொருள் விநியோகிக்கப்படும் 

என உறுதியளித்த அவர், பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4