ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி! – தூதுவருடன் திடீர் சந்திப்பு

#SriLanka #Meeting #Iran #Ambassador #sudden #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி! – தூதுவருடன் திடீர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (25) புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஈரானிய மறைந்த உயர்மட்டத் தலைவர் (Supreme Leader) அயதுல்லாஹ் அலி கமேனிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தினார்.

ஈரான் நாட்டு மக்களுடனான தனது ஒருமைப்பாட்டையும் (Solidarity), அந்நாட்டுடனான நீண்டகால நட்புறவையும் அவர் இதன்போது முன்னனாள் ஜனாதிபதி மீள உறுதிப்படுத்தினார்.

ஈரானியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் நட்புறவு ரீதியிலான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4