பிரித்தானியாவுக்கான புதிய இந்திய தூதராக தமிழர் நியமனம்

#India #Tamil #Lanka4 #England #Ambassador #L4
Prasu
5 hours ago
பிரித்தானியாவுக்கான புதிய இந்திய தூதராக தமிழர் நியமனம்

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த விக்ரம் கே. துரைசாமி, சமீபத்தில் சீனாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து, தற்போது பிரித்தானியாவுக்கான புதிய இந்திய தூதராக தமிழ்நாட்டை சேர்ந்த பெரியசாமி குமரன் நியமிக்கபட்டுள்ளார். 

1992 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான பெரியசாமி குமரன், தனது பட்டப்படிப்பை மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் சென்னை ஐஐடியில் முடித்துள்ளார். 

முன்னதாக வெளியுறவுத்துறை செயலாளர், பொருளாதார உறவுகளுக்கான கூடுதல் செயலாளர், சிங்கப்பூர் தூதர், கத்தார் தூதர், இலங்கை துணை தூதரக பணியாற்றியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான், அமெரிக்கா, பெல்ஜியம், லிபியா, எகிப்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!