காகித பயணச்சீட்டுகளுக்கு விடைகொடுக்கும் 'ஸ்மார்ட்' போக்குவரத்து முறை!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
காகித பயணச்சீட்டுகளுக்கு விடைகொடுக்கும் 'ஸ்மார்ட்' போக்குவரத்து முறை!

இலங்கை தொடருந்து திணைக்களம், CSRP செயற்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் முதல் 'ஸ்மார்ட்' பயணச்சீட்டு (Smart Ticketing) முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள காகித பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதே நோக்கமாகும்.

இந்த முன்னோடித் திட்டம் ஏப்ரல் மாதத்தில் சில நாட்களுக்கு களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் நாரஹேன்பிட்ட, நுகேகொடை, மாகும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க ஆகிய தொடருந்து நிலையங்களை உள்ளடக்கியதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

புதிய முறையில், நவீன பயணச்சீட்டு உறுதிப்படுத்தும் கருவிகள் (Ticket Validation Equipment) உள்ளடக்கப்படவுள்ளதுடன், இது பயணிகளின் வசதியையும் செயல்திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பயணிகளுக்கு ஏதுவான மேலதிக வசதிகளும் இதில் சேர்க்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டுக்குள் முழுமையான திட்டத்தையும் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!