மனைவி, மாமியார் வீட்டினரால் துன்புறுத்தல் - 20 வயது இளைஞர் தற்கொலை

#Death #Lanka4 #wife #Youngster #family #L4
Prasu
3 months ago
மனைவி, மாமியார் வீட்டினரால் துன்புறுத்தல் - 20 வயது இளைஞர் தற்கொலை

புனேவில், தனது மனைவி மற்றும் மாமியார் வீட்டார் ஆகியோரின் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சலால் மனமுடைந்த 20 வயது இளைஞர் ஒருவர் எலி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கும் ஒரு காணொளியைப் பதிவுசெய்து, அதை தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவி உட்பட ஏழு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நாசிக் மாவட்டம், மாலேகானைச் சேர்ந்த 20 வயது முகமது சாத் ஆசிஃப் சையத், புனேவின் ஜம்புல்வாடி பகுதியில் வசித்து வந்தார். 

சாத் தனது மனைவி கரிமுன்னிஷா என்ற நிஷா கானுடன் தகராறு கொண்டிருந்ததாகவும் அவரும் அவரது மாமியார் வீட்டார்களும் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாத் தனது கைப்பேசியில் ஒரு காணொளியைப் பதிவுசெய்தார். அதில், தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை விவரித்து, நிஷா உட்பட ஏழு பேரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். 

அந்தக் காணொளியை மாலேகானில் உள்ள தனது நண்பருக்கு அனுப்பிவிட்டு, பின்னர் எலி விஷம் அருந்தியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4