ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ்
தென் சீனக் கடலில் பெய்ஜிங்குடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸும் பிரான்சும் கூட்டு இராணுவப் பயிற்சி நடத்த அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் பாதுகாப்புச் செயலாளர் கில்பெர்டோ தியோடோரோ மற்றும் பிரெஞ்சு ஆயுதப் படைகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான அமைச்சர் கேத்தரின் வாட்ரின் ஆகியோர் பாரிஸில் நடந்த ஒரு சந்திப்பின் போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அச்சந்திப்பில், அவர்கள் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதித்து, விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேலும், "சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு" காணவும், நெருக்கடி காலங்களில் விநியோகச் சங்கிலியின் மீள்திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இருவரும் வலியுறுத்தினர்.
"இந்த ஒப்பந்தம் இருதரப்பு ஒத்துழைப்பை பெரிதும் வலுப்படுத்தும் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகள் மற்றும் பிரெஞ்சு ஆயுதப் படைகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைகளுக்குப் போதுமான அளவிலான சட்டப் பாதுகாப்பை வழங்கும்," என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரான்ஸைத் தவிர, பிலிப்பைன்ஸ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடனும் வருகைப் படைகளுக்கான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே )