IPL M01 - பெங்களூரு அணிக்கு 202 ஓட்டங்கள் இலக்கு

#Lanka4 #IPL #Cricket #hyderabad #Bengaluru #2026 #L4
Prasu
3 hours ago
IPL M01 - பெங்களூரு அணிக்கு 202 ஓட்டங்கள் இலக்கு

19வது ஐ.பி.எல் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 80 ஓட்டங்களும் அனிகேத் சர்மா 43 ஓட்டங்களும் எடுத்தனர். 

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூரு அணியில் ஜேக்கப் டபி , ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!