ஐக்கிய அமீரகத்தில் 70 பிரித்தானியர்கள் அதிரடி கைது

#Arrest #War #Lanka4 #picture #England #violating #L4
Prasu
6 hours ago
ஐக்கிய அமீரகத்தில் 70 பிரித்தானியர்கள் அதிரடி கைது

ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக ஐக்கிய அமீரகத்தில்70 பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலாவுக்கு சென்றவர்கள், விமான ஊழியர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பிரித்தானியர்கள் என கிட்டத்தட்ட 70 பேர்கள் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 10 வருடங்கள் வரையில் சிறைத்தண்டனை பெறக்கூடும்.

பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம் என கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பாதுகாக்க ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணம் கடுமையாக போராடி வருவதாகவே கூறப்படுகிறது.

போர் சேதங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் மூன்றாவது நபரால் பெற்றுக்கொள்வதும் சட்டத்திற்கு புறம்பானது என்றே கூறப்படுகிறது. 

இப்படியான குற்றங்களுக்கு 10 வருடங்கள் வரையில் சிறை அல்லது 200,000 பவுண்டுகள் வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!