கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் 3ம் இடம் பிடித்த வட்டக்கச்சி மாணவன்
#SriLanka
#School
#Student
#Lanka4
#competition
#South
#L4
Prasu
1 month ago
இந்து வித்தியா விருத்திக்கழகம் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கதாப்பிரசங்க போட்டியில் தேசிய ரீதியில் 3ம் இடத்தைப் பெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த தரம் 07 மாணவன் கோ.
தமிழரங்கன் தனது பரிசுப் பணத்தை முழுமையாக மாவட்ட விவாதிகள் கழகத்திற்கு வழங்கியுள்ளார். இந்த செயல் எங்களுக்கு பெருமையையும் நன்றியையும் அளிக்கிறது.
தனது வெற்றியை தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளாமல், கழக வளர்ச்சிக்காக பகிர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. விவாதிகள் கழகத்தின் சார்பில் அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழரங்கனின் இந்த செயல், மாவட்டத்தில் உள்ள சவால்கள் இருந்தாலும் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு நல்ல நினைவூட்டலாக உள்ளது.
(வீடியோ இங்கே )