கனடாவில் மதுபானங்கள் மீதான வருடாந்திர வரி உயர்வைக் கட்டுப்படுத்த தீர்மானம்

#Canada #government #Lanka4 #Alcohol #Department of Excise #L4
Prasu
1 hour ago
கனடாவில் மதுபானங்கள் மீதான வருடாந்திர வரி உயர்வைக் கட்டுப்படுத்த தீர்மானம்

கனடாவில் மதுபானங்கள் மீதான வருடாந்திர வரி உயர்வைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மதுபான உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, கனடாவில் மதுபானங்கள் மீதான 'கலால் வரி' ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் திகதி பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்படும்.

ஆனால், அரசாங்கம் கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்த வரி உயர்வை தற்காலிகமாக 2 சதவீதமாகக் கட்டுப்படுத்தியது.

இந்த வரி உயர்வின் கட்டுப்பாடு நடப்பு ஆண்டோடு முடிவடைய இருந்த நிலையில், தற்போது இதனை 2028ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், கனடாவில் உள்ள சிறிய வகை மதுபான உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், முதல் 15,000 ஹெக்டோலிட்டர் பீர் உற்பத்திக்கு விதிக்கப்படும் கலால் வரியில் பாதியைத் தள்ளுபடி செய்யும் ஒப்பந்தமும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!