அரச பயணமாக அமெரிக்கா செல்லும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்

#America #government #Lanka4 #KingCharles #England #Visit #L4
Prasu
2 hours ago
அரச பயணமாக அமெரிக்கா செல்லும் பிரித்தானிய மன்னர் சார்லஸ்

ஈரான் போர் துவங்கியதைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிறிது மோதல் போக்கு உருவாகியுள்ளது.

பல நேட்டோ நாடுகளை போல பிரித்தானியாவும் ஈரான் போரில் அமெரிக்காவுடன் கைகோர்க்காததால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கோபமடைந்தார்.

இந்நிலையில், உலகம் போர்ச்சூழலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லாத நிலையில், மன்னர் சார்லசின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிறிய விரிசலை செவ்வைப்படுத்த மன்னருடைய அமெரிக்கப் பயணம் தேவைப்படுகிறது.

அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் ஆகும் நேரத்தில், சரியாக அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார் மன்னர் சார்லஸ். 

2007ம் ஆண்டு, எலிசபெத் மகாராணியார் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவருக்கு அடுத்து பிரித்தானிய தலைமை மேற்கொள்ளும் முதல் அமெரிக்க அரசு முறைப்பயணம் இதுதான்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!