IPL M07 - தொடர் தோல்விகளை பதிவு செய்யும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #hyderabad #Kolkatta #2026 #L4
Prasu
2 hours ago
IPL M07 - தொடர் தோல்விகளை பதிவு செய்யும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 தொடங்கியது. தற்போதுவரை 5 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்த தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன. எனவே, இன்றைய போட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நாணய சுழற்சியை வெற்றிப் பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்கள் பெற்றது.

அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசான் 52 ஓட்டங்களும் அபிஷேக் சர்மா 48 ஓட்டங்களும் ட்ராவிஸ் ஹெட் 46 ஓட்டங்களும் நிதிஷ் குமார் ரெட்டி 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்நிலையில், 227 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

கொல்கத்தா அணி சார்பில், பின் ஆலென் 28 ஓட்டங்களும் அங்ரிஷ் ரகுவன்ஷி 52 ஓட்டங்களும் பெற்றனர். இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!