வலைவிரித்துப் பிடித்த பொலிஸார்: திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய இருவர்.

#SriLanka #Arrest #Police #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
வலைவிரித்துப் பிடித்த பொலிஸார்: திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய இருவர்.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் உற்சவ கால பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு மோட்டார் சைக்கிளின் வயர்களை துண்டித்து மோட்டார் சைக்கிளை களவாடி கிளிநொச்சி வரை கொண்டு சென்றுள்ளனர்.

வீதியில் இடை நடுவே மோட்டார் சைக்கிள் இயங்க மறுத்த நிலையில் வீதியில் நின்ற சமயம் மோட்டார் சைக்கிளில் உரிமையாளரினால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக தருமபுரம் பொலிசாரால் விரைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளும் மற்றும் 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

 குறித்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4