பிரித்தானியாவில் 44,000 கார்களை திரும்ப பெறும் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம்
இங்கிலாந்தில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் சுமார் 44000 கார்களை மீளக் கோரியுள்ளது. வாகனத்தின் இன்ஜின் பகுதியில் தீவிபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேசோலின் துகள் வடிகட்டிக் குழாய்க்கும் 48-வோல்ட் பெல்ட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருக்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லாததே இந்தக் குறைபாட்டிற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பிரச்சினையானது ஈரமான சூழ்நிலைகளில், இன்ஜின் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து, தீ விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2023 மற்றும் 2026க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பியூஜோ, சிட்ரோயன், டிஎஸ் ஆட்டோமொபைல்ஸ், வாக்ஸ்ஹால், லான்சியா, ஆல்ஃபா ரோமியோ, ஜீப் மற்றும் ஃபியட் ஆகிய நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்கள் மீளக் கோரப்படுகின்றன.
(வீடியோ இங்கே )