உச்சக்கட்ட பதற்றம்: ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது பிரான்ஸ் போர்க்கப்பல்!

#Lanka4 #Iran #Word #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Hormuz
Abi
3 hours ago
உச்சக்கட்ட பதற்றம்: ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது பிரான்ஸ் போர்க்கப்பல்!

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடிய பிறகு, முதன்முறையாக பிரான்ஸ் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்று அதன் வழியாகப் பயணித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடான பிரான்ஸை, ஈரான் ஒரு எதிரி நாடாகக் கருதவில்லை என்பதையே இது காட்டுகிறது என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தமது கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க அனுமதி கிடைக்கும் என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கையுடனும் அமைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரசா லாசரோ குறிப்பிட்டார்.

இதன் மூலம் பிலிப்பைன்ஸ் கொடியுடன் கூடிய கப்பல்கள், எரிசக்தி வளங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் மாலுமிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை வழங்க ஈரான் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!