IPL M08 - மும்பையை இலகுவாக வீழ்த்திய டெல்லி அணி
#Delhi
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Mumbai
#2026
#L4
Prasu
4 hours ago
ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களும் ரோகித் சர்மா 35 ஓட்டங்களும் நமன் தீர் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணி சார்பில், சிறப்பாக விளையாடிய சமீர் ரிஸ்வி 90 ஓட்டங்களும் பதும் நிசங்கா 44 ஓட்டங்களும் குவித்தனர்.
(வீடியோ இங்கே )