IPL M09 - தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Gujarat
#Rajasthan
#2026
Prasu
13 hours ago
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். 2026 சீசனின் 9வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்ரபில், சூர்யவன்ஷி 31 ஓட்டங்களும் ஜெய்ஸ்வால் 55 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்நிலையில், 211 என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சாய் சுதர்ஷன் 73 ஓட்டங்களும் ஜோஸ் பட்லர் 26 ஓட்டங்களும் ரஷீத் கான் 24 ஓட்டங்களும் ரபாடா 23 ஓட்டங்களும் பெற்றனர்.
இறுதியில், 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த ஆட்டத்தை கைப்பற்றியுள்ளது.
(வீடியோ இங்கே )