IPL M11 - ரசிகர்களுக்கு ஏமாற்றம்: சென்னை அணி மீண்டும் தோல்வி
2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 11வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பெங்களூரு அணி களமிறங்கியது.
அதிரடியாக விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது.
பெங்களூரு அணி சார்பில், பில் சால்ட் 46 ஓட்டங்களும் விராட் கோலி 28 ஓட்டங்களும் தேவ்தத் படிக்கல் 50 ஓட்டங்களும் ரஜத் பட்டிதர் 48 ஓட்டங்களும் டிம் டேவிட் 70 ஓட்டங்களும் குவித்தனர்.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி மீண்டும் தடுமாற்றம் அடைந்த நிலையில், 19.4 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
சென்னை அணி சார்பில், சர்ஃபராஸ் கான் 50 ஓட்டங்களும் பிரசாந்த் வீர் 43 ஓட்டங்களும் ஜேமி ஓவர்டன் 37 ஓட்டங்களும் பெற்றனர்.
இறுதியில் பெங்களூரு அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
(வீடியோ இங்கே )