வெளிநாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கான VAT வரி ஜூலை வரை ஒத்திவைப்பு!

#SriLanka #Digital #Lanka4 #Vat #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
வெளிநாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கான VAT வரி ஜூலை வரை ஒத்திவைப்பு!

வதியாத சேவை வழங்குநர்களால் (Non-resident service providers) மின்னணு தளங்கள் ஊடாக வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) அமுல்படுத்தப்படும் திகதியை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை PN/VAT/2025-03 எனும் இலக்கத்தையுடைய அறிவித்தல் மூலம் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு நடைமுறையானது ஆரம்பத்தில் 2025 ஒக்டோபர் 1 ஆம் திகதி அமுல்படுத்தப்படவிருந்தது. பின்னர் நிதி அமைச்சினால் இது 2026 ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 2026 ஜூலை 1 ஆம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்கள், இந்த வரி விதிப்பு முறைமைக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், சட்ட விதிகளுக்கு இணங்க இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த அரசாங்கம் இந்த காலநீடிப்பை வழங்கியுள்ளது.இந்தத் திகதி மாற்றமானது பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முறையான திருத்தங்களுக்கு உட்பட்டது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!