இலங்கை நடிகை இந்தியாவில் மரணம் விபங்கள் உள்ளே ...

#India #SriLanka #Death #Actor #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
இலங்கை நடிகை இந்தியாவில் மரணம் விபங்கள் உள்ளே ...

இலங்கையைச் சேர்ந்த நடிகை ஷாஸ்வி பாலா திடீர் மறைவு சன் தொலைக்காட்சியில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் நம்பர் 1 இடத்தில் டிஆர்பியில் இருந்து வந்த தொடர் தான் கயல்.

இலங்கையைப் பூர்வீமாகக் கொண்டவரும், தற்போது இந்திய சீரியல், சினிமா மற்றும் விளம்பரத் துறைகளில் செயற்பட்டு வந்தவருமான, ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியத்தின் தீடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆரம்பத்தில், இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நன்கறியப்பட்டவரான அவர், பின்னர் இந்தியாவிற்கு சென்றிருந்ததுடன், பல திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள் என நட்சத்திரமாகத் திகழ்ந்து வந்தார்.

அத்தோடு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து , அங்கேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் இன்று காலை பெங்களூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இச்செய்தி சமூகவலைதளங்களில் அவரது நண்பர்கள், ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4