20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்!

#SriLanka #Lanka4 #Public #Safety #Alert #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்!

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, நாட்டின் 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (Red Alert), 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நாட்டின் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்காக, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4