இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் இணக்கப்பாடு!
#SriLanka
#Russia
#Fuel
Soruban
1 month ago
ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் அரசியல் ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக அரசியல் ரீதியான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த இறுதிக்கட்ட விபரங்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடைகளுக்குத் தீர்வாக, ரஷ்யாவின் இந்த எண்ணெய் விநியோகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.