எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்ட இருவர் கைது: பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு.

#SriLanka #Arrest #Police #Lanka4 #Raid #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்ட இருவர் கைது: பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு.

தேவையான உரிமங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக எரிபொருளைச் சேமித்து வைத்திருந்ததற்காக, தனித்தனி சோதனைகளில் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த இரண்டு சோதனை நடவடிக்கைகளும் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி உடுதும்பர காவல்நிலைய அதிகாரிகள் நேற்று பிற்பகல் அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது உரிமம் இல்லாமல் சேமித்து வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் பெற்றோலை கைப்பற்றியதுடன் 47 வயதுப் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை நவகமுவ காவல்பிரிவிற்குட்பட்ட பகுதியில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நவகமுவ காவல்நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன்போது உரிமம் இல்லாமல் சேமித்து வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் பெற்றோல், 40 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் 60 லீற்றர் டீசல் ஆகியவற்றை கைப்பற்றியதுடன் 56 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4