கனடாவில் போலி நாணயத்தாள்களை விற்பனை செய்த 6 பேர் கைது
கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் இணையதளம் வழியாகப் போலிப் பணத்தை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை ஹால்டன் பிராந்தியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது சுமார் 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வாயிலாகக் கனடியப் போலிப் பண விற்பனை விளம்பரப்படுத்தப்படுவதைக் காவல்துறை கண்டறிந்தது.
இந்த கும்பல் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் கடைகளை நடத்தி வந்தது எனவும் போலிப் பணத்தை "திரைப்படப் படப்பிடிப்பிற்கான பணம்" என்ற பெயரில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்துள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது பெருமளவிலான போதைப்பொருட்களும் சிக்கின. இதில் 12 அவுன்ஸ் கோகோயின், 2 அவுன்ஸ், 6 அவுன்ஸ் மெத்தாம்பேட்டமின் மற்றும் 80 சானாக்ஸ் மாத்திரைகள் அடங்கும்.
(வீடியோ இங்கே )