ஈரானில் தடுப்புக்காவலில் இருந்த பிரெஞ்சு தம்பதியர் விடுதலை

#France #Prison #Lanka4 #Iran #release #couple #L4
Prasu
2 months ago
ஈரானில் தடுப்புக்காவலில் இருந்த பிரெஞ்சு தம்பதியர் விடுதலை

ஈரானில் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த பிரெஞ்சு நாட்டவர்களான செசில் கோலர் மற்றும் ஜாக் பாரிஸ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், அவர்களின் விடுதலைக்கு ஓமான் மத்தியஸ்தம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தம்பதியினர், உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 2022 முதல் ஈரானின் எவின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பிரான்ஸ் கூறியிருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அன்று முதல் பிரெஞ்சு தூதரகத்தில் தங்கியிருந்த அவர்கள் தற்போது மீளவும் பிரான்ஸ் திரும்பியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4