விளையாட்டால் பறிபோன 23 வயது இளைஞரின் உயிர்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது.
போட்டியின் இடையே ஒரு ஓட்டம் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி தலையிட்டு தீர்த்து வைத்ததாக தெரிகிறது.
பின்னர் அன்று மாலை அதே விவகாரம் தொடர்பாக சில வாலிபர்கள் இடையே மீண்டும் விவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
அப்போது 26 வயது கே.கிஷோர் என்ற வாலிபர், போட்டி நடுவரின் சகோதரரான 23 வயது அஜித் என்பவரை தாக்கி அவரது நெஞ்சில் கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அஜித் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விளையாட்டின் இடையே நடந்த சாதாரண பிரச்சனை வாலிபரின் உயிரைப் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
(வீடியோ இங்கே )