போர் நிறுத்த காலத்தை பயன்படுத்தி எரிபொருள் விலையைக் குறைக்கக் கோரிக்கை!

#SriLanka #prices #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
போர் நிறுத்த காலத்தை பயன்படுத்தி எரிபொருள் விலையைக் குறைக்கக் கோரிக்கை!

போர் நிறுத்த காலத்தை பயன்படுத்தி எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.மத்திய கிழக்கில் நிலவும் தற்காலிக போர் நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி, நாட்டின் அத்தியாவசிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தற்போது ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்த இடைவெளியை ஒரு வாய்ப்பாகக் கருதி, நாட்டிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு (LP Gas) , விவசாயத்திற்கான உரங்கள் , மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உர விநியோகம் தொடர்பாக ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டைக் கூறினாலும், கள யதார்த்தம் வேறாக உள்ளது.மத்திய கிழக்கு பதற்றத்தைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை, தற்போதுள்ள உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு ஏற்ப குறைக்க வேண்டும் .

எனவே, இன்று நள்ளிரவோ அல்லது நாளைய தினமோ எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!