ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க நுவான் துஷாரவுக்கு தடை? ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி ஆட்சேபனை!

#SriLanka #Srilanka Cricket #Lanka4 #IPL #Sports News #Banned #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க நுவான் துஷாரவுக்கு தடை? ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி ஆட்சேபனை!

2026 இந்தியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட சர்வதேச ரீதியிலான லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக, தனக்கு 'தடையின்மைச் சான்றிதழை' வழங்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எதிராக ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

சர்வதேச லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தடையின்மைச் சான்றிதழ் அவசியமாகும். அதனைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, தனக்குச் சாதகமான ஓர் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த மனுவிற்கு எதிராகத் தமது தரப்பு ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்கிய கொழும்பு மாவட்ட நீதிமன்றம், இந்த மனுவை மீளவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4