IPL M15 - கொல்கத்தா அணியை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

#Lanka4 #IPL #Cricket #Lucknow #Kolkatta #L4
Prasu
2 months ago
IPL M15 - கொல்கத்தா அணியை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகிறது. இதில் நாணய சுழற்சியை வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில், ரகானே 41 ஓட்டங்களும் ரகுவன்ஷி 45 ஓட்டங்களும் பவல் 39 ஓட்டங்களும் கீரின் 32 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில்,182 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி சார்பில், ஆயுஷ் பதோனி 54 ஓட்டங்களும் ஏய்டன் மார்க்ரம் 22 ஓட்டங்களும் இறுதியில் அணியை வெற்றிக்கு கொண்டு சென்ற முகுல் சவுத்ரி 54 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4