யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 10 பேர் மரணம்

#India #Death #Accident #Lanka4 #Boat
Prasu
2 months ago
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 10 பேர் மரணம்

உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே கேஷிகாட் பகுதியில் யமுனா நதியில், சுமார் 25 யாத்திரிகர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருந்தாவன் பகுதியில் உள்ள தற்காலிக பாலம் அருகே அதிக நெரிசலுடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 14 பேருக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இன்னும் 12 பேர் காணாமல் போயிருக்கலாம் என்ற அச்சத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4