IPL M18 - தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

#Delhi #Lanka4 #IPL #Cricket #Chennai #L4
Prasu
2 months ago
IPL M18 - தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த  சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். 2026ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் குவித்தது.

சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 115 ஓட்டங்களும் ஆயுஷ் மாத்ரே 59 ஓட்டங்களும் ஷிவம் துபே 20 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 189 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

டெல்லி அணி சார்பில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 60 ஓட்டங்களும் நிசங்க 41 ஓட்டங்களும் எடுத்தனர். 

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4