IPL M20 - தொடர் தோல்விகளை பதிவு செய்யும் மும்பை இந்தியன்ஸ் அணி
#Lanka4
#IPL
#Cricket
#Mumbai
#Bengaluru
Prasu
2 months ago
2026 ஐ.பி.எல் தொடரின் 20வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்கள் குவித்தது.
பெங்களூரு அணி சார்பில், விராட் கோலி 50 ஓட்டங்களும் சால்ட் 78 ஓட்டங்களும் 53 ஓட்டங்களும் டிம் டேவிட் 34 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
மும்பை அணி சார்பில், ரிக்கில்டன் 37 ஓட்டங்களும் சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களும் ரூத்தர்ஃபோர்டு 71 ஓட்டங்களும் ஹர்திக் பாண்டியா 40 ஓட்டங்களும் பெற்றனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே