புத்தாண்டை வரவேற்க தயாராகும் இலங்கை மக்கள்!
#SriLanka
#New Year
#ImportantNews
#L4
Lakhi
3 hours ago
தமிழ் சிங்கள புத்தாண்டை வரவேற்பதற்கு, இலங்கை மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதற்கமைய, ஏப்ரல் 13 ஆம் திகதியான இன்று, பழைய வருட தினமாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் பழைய வருடத்தின் குறைகள் நீங்கி, தூய்மையுடன் புதிய வருடத்தை வரவேற்க மக்கள் தயாராக வேண்டும் எனக் கூறப்படுகிறது.
புண்ணிய காலம் பிறப்பதற்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, பலகாரங்கள் செய்து, புத்தாண்டுக்கு தயாராகுவது வழக்கமாகும்.
வில்வம் சாறு கலந்த நீரை தேய்த்து நீராடுவது சிறப்பானது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இதேவேளை, சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பயணம் செய்வதே தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
(வீடியோ இங்கே )