மகாவலி கங்கையில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயம்!

#Death #people #world_news #ImportantNews #Public #L4
Lakhi
2 months ago
மகாவலி கங்கையில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயம்!

திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணமல் போயுள்ளனர். சேருநுவர காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு, இதனை உறுதிப்படுத்தினர்.

புத்தாண்டு தினமான நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உட்பட 3 பேர் மகாவலி கங்கை குறுக்காகச் செல்லும் ஆற்றில் நீராடியுள்ளனர்.

இதன்போது, மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேருவில காவல்துறையின் பொறுப்பதிகாரி சூரியன் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4