சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு

#India #Death #Lanka4 #Factory #Blast #L4
Prasu
2 months ago
சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்ததில் 10 பேர் உயிரிழப்பு

இந்தியா, சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டுவருகின்றது.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை மோசமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர கூடும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4