நீங்கள் தினமும் தேங்காய் பால் குடிப்பவரா? இந்த பதிவு உங்களுக்கு தான்.....

#Health #Milk Powder #Coconut #drink #ImportantNews
Lakhi
2 months ago
நீங்கள் தினமும் தேங்காய் பால் குடிப்பவரா? இந்த பதிவு உங்களுக்கு தான்.....

சமீப காலமாக முக்கிய நகரங்களில் விளையாட்டு மைதானம், நடைபயிற்சி செய்யக்கூடிய இடம் போன்றவற்றில் தேங்காய் பால் விற்பனை மிகவும் ட்ரெண்டாகி வருவதை நாம் பார்க்க முடிகிறது. தேங்காய் பாலை நாம் சாதாரணமாக வீடுகளிலேயே செய்ய முடியும் என்றாலும் அதற்கு மெனக்கிடல் அதிகம் என்பதால் இவ்வாறு தெருவோரங்களில் விற்பனை செய்யக்கூடிய தேங்காய் பாலை மக்கள் விரும்பி வாங்கி குடித்து வருகின்றனர்.

அதிலும் கோடை காலம் தொடங்கிவிட்டது என்பதால் தேங்காய் பால் நம்முடைய உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்யும் பொழுது நம்மை அறியாமல் ஒரு பயம் வரும். தொடர்ந்து தேங்காய்ப்பால் குடிப்பதால் நமக்கு வேற எதுவும் பாதிப்பு வந்து விடுமோ என்கின்ற சிந்தனை தோன்றும்.

அப்படியாக தேங்காய் பால் தினமும் குடிப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

  • தேங்காய் பாலில் வைட்டமின் சி, இ, பி, காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய கால்சியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நம்முடைய எலும்பை வலுவானதாக மாற்றுகிறது.
  • எலும்பு தேய்மானத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், தேங்காய் பாலில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து நம் உடலுக்கு தேவைப்படுகின்ற 25 சதவீத இரும்பு சத்துக்களை கொடுத்து விடுகிறது. அதேபோல் வறண்ட சருமம் உள்ளவர்கள், தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் பாலை குடிப்பதன் வழியாக நல்ல நிவாரணம் பெறலாம்.
  • வயிற்றுப்புண் உள்ளவர்கள் மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த தேங்காய் பால் ஒரு நல்ல நிவாரணமாக அமைகிறது. ஆனால் இந்த தேங்காய் பால் எல்லோருக்கும் ஏற்றது இல்லை. காரணம் இதில் 80 முதல் 90 சதவீத நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் இதய பிரச்சனை உள்ளவர்கள் இதை குடித்தால் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கிறது.
  • அதைப்போல் சிறுநீரக பிரச்சனைகளும், உடல் பருமன் உள்ளவர்களும் பால் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்களும் இதனை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். தேங்காய் பாலில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் நீண்ட காலத்திற்கு தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்வது சர்க்கரை வியாதியை ஏற்படுவதற்கும் அபாயம் உள்ளது.
images/content-image/2024/04/1776306781.png
இவ்வாறு ஏதேனும் பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் தேங்காய் பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

முக்கியமாக ஒரு நாளைக்கு 50 முதல் 100 மில்லி வரை தேங்காய் பால் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆனால் தினமும் சாலைகளில் ஒரு டம்ளர் கணக்கில் தேங்காய் பால் குடிப்பது நிச்சயம் ஆரோக்கியம் மற்றதாக கருதப்படுகிறது. வாரத்தில் ஒரு முறை அல்லது என்றாவது ஒரு நாள் என்றால் நிச்சயமாக நாம் எடுத்துக் கொள்ளலாம், தொடர்ந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4