எரிவாயு கையிருப்பு குறித்து லிட்ரோ தலைவர் வழங்கிய உறுதிமொழி.
#SriLanka
#Litro Gas
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனை சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
அதற்கமைய, மே மாதம் வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என்று லாபஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பிரதான முனையங்கள் வழியாக இன்று முதல் 5,000 மெட்ரிக் டன் எரிவாயு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )