வவுனியா நகரப்பகுதியில் இருந்து சடலம் மீட்பு!

#SriLanka #Vavuniya #Death #Police #ImportantNews #Public #L4
Lakhi
4 hours ago
வவுனியா நகரப்பகுதியில் இருந்து சடலம் மீட்பு!

வவுனியாவில் நகரப்பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது குறித்த சடலமானது நேற்று வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பள்ளிவாசலுக்கு அருகில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக நேற்று மதியம் வவுனியா காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே காவல்துறையினர் அந்தப்பகுதிக்கு வருகை தந்ததாக கூறப்படுகின்றது.அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பர்ஸ்சான் காவல்துறையினருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!