யுவன் ஷங்கர் ராஜாவின் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி - இதோ மாஸ் அப்டேட்!

#India #Cinema #ImportantNews #Song #Singer #L4
Lakhi
4 hours ago
யுவன் ஷங்கர் ராஜாவின் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி - இதோ மாஸ் அப்டேட்!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் (Joju George) முதன்முறையாக இயக்குநராக அவதரிக்கும் 'பரிபாடி' (Paripadi) திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

ஏற்கனவே தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள யுவன், தற்போது அண்டை மாநிலமான கேரளாவிலும் தனது இசைப் பயணத்தைத் தொடங்கவுள்ளது அவரது இரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தை வேணு குன்னாப்பில்லி (Venu Kunnappilly) தயாரிக்கிறார்.

இப்படத்திற்குப் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். 'பரிபாடி' படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், யுவனின் பின்னணி இசை மலையாளத் திரைப்படங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!