" சிக்கன் ரைஸ்ல ..சிக்கன் எங்க?" வைரலாகும் ரகளைச் சம்பவம்!

#India #Arrest #rice #Chicken #ImportantNews #L4
Lakhi
2 months ago
" சிக்கன் ரைஸ்ல ..சிக்கன் எங்க?" வைரலாகும் ரகளைச் சம்பவம்!

இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்ற நபர், தான் ஓர்டர் செய்த சிக்கன் ரைஸில் போதிய அளவில் சிக்கன் துண்டுகள் இல்லை என்று கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த நபர், உணவின் தட்டைத் தூக்கியெறிந்து, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதுடன் உணவக ஊழியர்களையும் தாக்கியுள்ளார். இந்த வன்முறைச் சம்பவத்தால் அந்த உணவகத்திற்குச் சுமார் 35,000 ரூபாய் (இந்திய ரூபாய்) மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறை, பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4