வெலிகமவில் தாய்மாமனின் வெறிச்செயல்; இளைஞன் பரிதாபமாக பலி!

#SriLanka #Death #Young #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
வெலிகமவில் தாய்மாமனின் வெறிச்செயல்; இளைஞன் பரிதாபமாக பலி!

மாத்தறை - வெலிகம பரணக்கடே பகுதியில் நேற்று இரவு (17) இளைஞன் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரென காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞன் தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, இளைஞன் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 58 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4