IPL M26 - பெங்களூரு அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Chennai #hyderabad
Prasu
2 hours ago
IPL M26 - பெங்களூரு அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐ.பி.எல்.தொடரின் 26வது போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

பிலிப் சால்ட் 63 ஓட்டங்களும் டிம் டேவிட் 26 ஓட்டங்களும் விராட் கோலி 19 ஓட்டங்களும் படிக்கல் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.5 ஓவரில் 179 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 57 ஓட்டங்களும் ஸ்டப்ஸ் 60 ஓட்டங்களும் மில்லர் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!