IPL M28 - தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Rajasthan #Kolkatta
Prasu
2 months ago
IPL M28 - தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2026 ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று 28வது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

இதில் நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.

அதன்படி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தாவிற்கு 156 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ராஜஸ்தான் தரப்பில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 39 ஓட்டங்களும் வைபவ் சூர்யவன்ஷி 46 ஓட்டங்களும் குவித்தனர். 

கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி, வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 19.4 ஓவர்களில் 161 ஓட்டங்கள் குவித்தது.

இதன்மூலம் 2026 தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி. கொல்கத்தாவில் ரிங்கு சிங் 53 ஓட்டங்களும் அங்குல் ரோய் 29 ஓட்டங்களும் குவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4